இந்தியா

அனில் செளஹானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: தகவல்

3rd Oct 2022 06:44 PM

ADVERTISEMENT


முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அனில் செளஹானுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபின் ராவத்துக்குப் பிறகு முப்படைகளின் தலைமை தளபதியாக கடந்த 30ஆம் தேதி  அனில் செளஹான் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியான விபின் ராவத், கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, அந்தப் பதவி 9 மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்தது.

படிக்கஇந்தியாவில் அதிக ஊழல் செய்யும் மாநிலம் எது தெரியுமா?

ADVERTISEMENT

இந்நிலையில், புதிய முப்படை தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் புதன்கிழமை (அக்.28) நியமிக்கப்பட்டாா். சனிக்கிழமை (அக்.30) முப்படை தலைமைத் தளபதியாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அனில் செளஹான் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் அனில் செளஹானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமாா் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அனில் செளஹான், ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதில் பரந்த அனுபவம் கொண்டவா். கடந்த ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தின் கிழக்குப் படைப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது அவர் ஓய்வு பெற்றாா்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT