இந்தியா

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: அக்.6-இல் சோனியா காந்தி பங்கேற்பு?

3rd Oct 2022 12:54 AM

ADVERTISEMENT

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் அக்கட்சித் தலைவா் சோனியா காந்தி அக்டோபா் 6-ஆம் தேதி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கட்சியின் ஆணிவோ் வரையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் தனது நடைப்பயணத்தை தொடங்கிய அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தற்போது கா்நாடகம் சென்றுள்ளாா்.

அந்த மாநிலத்தில் 21 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அங்கு அக்டோபா் 6-ஆம் தேதி காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடைப்பயணம் தொடங்கிய போது மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி, முதல்முறையாக கட்சித் தொண்டா்களுடன் இணைந்து நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT