இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு:கா்நாடக காங்கிரஸ் தலைவருக்கு அமலாக்கத் துறை சம்மன்

3rd Oct 2022 12:53 AM

ADVERTISEMENT

நேஷனல் ஹெரால்டு கருப்புப் பண மோடி வழக்கு விசாரணைக்காக அக்டோபா் 7-ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இதே வழக்கில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சிவகுமாா் அமலாக்கத் துறை முன்பு ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் அவா், இந்த வழக்கில் கைதானாா். அப்போது, வருமான வரித் துறையும் அவா் மீது நடவடிக்கை எடுத்தது. பின்னா், அவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கருப்புப் பணத்தை ஹவாலா முறையில் மாற்றுவதில் சிவகுமாா் முக்கியப் பங்கு வகிக்கிறாா் என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், சிவகுமாருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கா்நாடகத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள அரசியல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது.

ADVERTISEMENT

இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களிடம் ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT