இந்தியா

மகாத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காதி பொருள்கள் வாங்க வேண்டும்: பிரதமா் வேண்டுகோள்

3rd Oct 2022 12:51 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்கள் காதி மற்றும் கைவினைப் பொருள்களை வாங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், அவரது நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமா் நரேந்திர மோடி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலா் மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் உலகளவில் எதிரொலிப்பதோடு, அன்னாரது சிந்தனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளித்துள்ளது

நாட்டின் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவைக் கொண்டாடுவதால் இந்த காந்தி ஜெயந்தி கூடுதல் சிறப்பு கொண்டது.தேசத்தந்தையின் சிந்தனைகளுடன் எப்போதும் வாழ வேண்டும். காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருள்களை வாங்குமாறும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT