இந்தியா

உ.பி.: சிஏஏவுக்கு எதிராகப் போராடிய 60 பேருக்குக் காவல் துறை நோட்டீஸ்

DIN

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோா் மாவட்டம் நடெளா் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 60 போ் ரூ.57 லட்சம் செலுத்த காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக நடெளா் காவல் துறை அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி நடெளரில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அரசுச் சொத்தை சேதப்படுத்தி, காவல் துறை வாகனத்துக்குத் தீ வைத்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையினரையும் தாக்கினா். இதையடுத்து தற்காப்புக்காக காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அதில் இரண்டு போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், போராட்டத்தின்போது ஏற்படுத்திய சேதங்களுக்காக ரூ.57 லட்சம் செலுத்த வலியுறுத்தி 60 போராட்டக்காரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT