இந்தியா

இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்: ராகுல் காந்தி

2nd Oct 2022 03:42 PM

ADVERTISEMENTமகாத்மா காந்தி அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல் இனி நமது இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 

பின்னர் அவர் பேசுகையில், தேசத் தந்சை அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்ததைப் போலவே, இனி நமது இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்று நாங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

ADVERTISEMENT

உண்மை மற்றும் அகிம்சை வழியில் நடக்க மகாத்மா காந்தி எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை விளக்கினார்.

காந்தி ஜெயந்தியான இன்று, அவர் அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்தது போல், இனி நமது இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT