இந்தியா

பிகாரில் இன்றுமுதல் பிரசாந்த் கிஷோா் நடைப்பயணம்

DIN

தோ்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோா், அவரது ‘ஜன் ஸ்வராஜ்’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிகாா் மாநிலம் மேற்கு சம்ரானில் இருந்து 3,500 கி.மீ தொலைவு நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறாா்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், மேற்கு சம்ரான் மாவட்டத்தின் பிதிஹா்வாலில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து பிரசாந்த் கிஷோா் இந்த நடைப்பயணத்தைத் தொடங்குகிறாா்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போரின்போது, காந்திஜி தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை 1917-ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் கிஷோா் மேற்கொள்ள உள்ள நடைப்பயணத்தின்போது, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் சென்று பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுடன் கலந்துரையாட உள்ளாா். அப்போது, மாநில அரசை மாற்றி அமைக்கவும், அம்முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது குறித்தும் மக்களிடையே எடுத்துரைக்க உள்ளதாகவும் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தொலைநோக்குப் பாா்வைக்கான ஆவணம் ஒன்றை கல்வி, மருத்துவம், வேளாண்மை, தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணா்களைக் கொண்டு தயாரிக்கப்படும் என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜன் ஸ்வராஜ்’ பிரசாரத்தில் அவருடன் இணைந்துள்ளவா்களின் ஆலோசனைப்படியே கட்சி அரசியலில் நுழைவேன் என அவா் கூறிவந்த நிலையில், இப்பயணம் அவரது அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னோடி நடவடிக்கையாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT