இந்தியா

முலாயம் சிங் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

2nd Oct 2022 06:23 PM

ADVERTISEMENT


உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் திடீர் உடல்நல குறைவு காரணமாக, மேதந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முலாயம் சிங் யாதவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து, குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிக்க | சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரிச் சலுகை நீட்டிப்பு!

ADVERTISEMENT

இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மேசமடைந்ததை அடுத்து, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், கட்சி தொண்டர்கள், தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT