இந்தியா

காந்தி நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

2nd Oct 2022 08:19 AM

ADVERTISEMENT

 

தில்லியிலுள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை  செலுத்தினார். 

மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதேபோன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

ADVERTISEMENT

அவர்களைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் காந்தி நினைவிடத்திற்கு வருகைபுரிந்தார். காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT