இந்தியா

நாட்டில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா; சிகிச்சையில் 37,444

2nd Oct 2022 10:24 AM

ADVERTISEMENT

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,375 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர்.

நேற்று 3,805  பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37,444-ஆக குறைந்துள்ளது. 

ஒரு நாளில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. அதிகபட்சமாக குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 80 சதவிகிதமும், ஆந்திரத்தில் 50 சதவிகிதமும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT