இந்தியா

ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் கருப்புக் கொடி காட்ட பாஜக திட்டம்? காங்கிரஸ் குற்றச்சாட்டு

2nd Oct 2022 06:31 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது பாஜக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கூறியதாவது: “ பாஜக தலைவர்கள் அதன் கட்சி உறுப்பினர்களிடம் கருப்புக் கொடியினை விநியோகித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைசூர் நடைப்பயணத்தின்போது காட்ட திட்டமிட்டுள்ளதாக எனக்குத் தெரிய வந்தது. இது குறித்து மாநிலக் காவல் ஆணையரிடம் நான் பேசியுள்ளேன். கருப்புக் கொடி காட்டுவது, கற்களை வீசுவது மற்றும் முட்டைகளை வீசுவது போன்ற செயல்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கான முடிவுகள் எதிர்காலத்தில் அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸின் நடைப்பயணம் குறித்து பாஜக அச்சத்தில் உள்ளது.” என்றார்.

இதையும் படிக்க: வசனமே இல்லாத படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி! 

தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து  தொடங்கப்பட்ட ஒற்றுமை நடைப்பயணம் கேரளத்தில் தொடர்ந்தது. தற்போது இந்த நடைப்பயணம் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT