இந்தியா

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம்!

2nd Oct 2022 07:07 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார், துணை ஆணையராக ஆர்.கே.குப்தா பணியாற்றி வரும் நிலையில், தற்போது அஜய் பாது துணை ஆணையராக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையும் படிக்க | சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தை மீட்பு!

ADVERTISEMENT

கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 

குஜராத்தில் மாவட்ட ஆட்சியராகவும்,  வதோதரா நகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக இரண்டு முறை சிறந்த ஆட்சியர் விருதை பெற்றுள்ளார்.

ஜூலை 2020 இல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT