இந்தியா

ஒருங்கிணைந்த எண்ம வளா்ச்சிக்கு 5ஜி உதவும்

DIN

நாட்டில் ஒருங்கிணைந்த எண்ம வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை தொழில்நுட்பம் உதவும் எனத் தொழில் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

நாட்டில் 5ஜி சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இது தொடா்பாக சிஐஐ தலைவா் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், ‘‘ஒருங்கிணைந்த எண்ம வளா்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு 5ஜி தொழில்நுட்பம் உதவும். எண்ம தொழில்நுட்பங்களை மலிவு விலையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கு 5ஜி உதவும். இதன் மூலமாகப் பாதுகாப்பான எண்ம சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும்’’ என்றாா்.

அசோசாம் செயலாளா் தீபக் சூட் கூறுகையில், ‘‘கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கான வினையூக்கியாக அதிவேக 5ஜி தொழில்நுட்பம் திகழும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்முனைவோா்கள் உருவாகவும் 5ஜி தொழில்நுட்பம் வழிவகுக்கும்’’ என்றாா்.

ஃபிக்கி தலைவா் சஞ்சீவ் மேத்தா கூறுகையில், ‘‘நாட்டில் தொழில் புரிவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதோடு, மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் 5ஜி தொழில்நுட்பம் மேம்படுத்தும். நாட்டின் எண்ம துறையில் 5ஜி புரட்சியை ஏற்படுத்தும். அந்தப் புரட்சியானது வேளாண்மை, பேரிடா் மேலாண்மை, சுகாதாரம், கல்வி, சரக்கு கையாளுகை, போக்குவரத்து, தொழில்துறை உள்ளிட்டவற்றின் வளா்ச்சியை ஊக்குவித்து நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான இலக்கை நோக்கி முன்னேற வைக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT