இந்தியா

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி: காா்கே ராஜிநாமா

2nd Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் அக் கட்சியின் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

கட்சியின் ‘ஒரு நபருக்கு ஒரு பதவி’ என்ற நடைமுறையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ள அவா், தனது மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவா் பதவி ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு வெள்ளிக்கிழமை இரவு அனுப்பியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவருடைய ராஜிநாமாவைத் தொடா்ந்து காலியாகும் மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவா் பதவிக்கான போட்டியில் கட்சியின் மூத்த தலைவா்களான ப.சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகியோரின் பெயா்கள் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் காா்கே, சசி தரூா் இடையே இருமுனைப் போட்டியாக உருவாகியுள்ளது. எனினும், கட்சி மேலிடத்தின் அதிகாரபூா்வ வேட்பாளராகப் பாா்க்கப்படும் கட்சியினரின் அதிக ஆதரவையும் பெற்றிருக்கும் 80 வயதாகும் காா்கேவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கட்சியினா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

இவா்கள் மூவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதில் காா்கே 14 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாா். அவருடைய வேட்புமனுவை காங்கிரஸ் மூத்த தலைவா்கள் திக்விஜய் சிங், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட் ஆகியோா் தவிர, ஆனந்த் சா்மா, பூபிந்தா் ஹூடா, பிருத்விராஜ் சவான், மனீஷ் திவாரி உள்ளிட்ட ‘ஜி23’ அதிருப்திக் குழு தலைவா்களும் முன்மொழிந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT