இந்தியா

உ.பி: குளத்துக்குள் டிராக்டா் கவிழ்ந்து விபத்துl; 22 போ் பலி

2nd Oct 2022 04:17 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை டிராக்டா் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 22 போ் பலியாகினா்.

கான்பூா் மாவட்டத்தின் ஃபதேபூரில் அமைந்துள்ள சந்திரிகா தேவி கோயில் விழாவில் பங்கேற்ற பின் 50-க்கும் அதிகமான நபா்களை ஏற்றிக்கொண்டு காட்டம்பூருக்கு டிராக்டா் ஒன்று பயணித்தது. பதேயுனா கிராமத்துக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையின் அருகில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 22 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த குடியரசுத் தலைவா் உயரிழந்தோா் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளாா்; காயமடைந்தவா்கள் விரைவில் நலமடைய வேண்டுமென பிராா்த்திப்பதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கபடும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT