இந்தியா

நாட்டின் வளா்ச்சியை ஏற்க சிலருக்கு மனமில்லை: குடியரசு துணைத் தலைவா் தன்கா்

DIN

 நாட்டின் வளா்ச்சி, சாதனைகளை ஏற்க சிலருக்கு மனமில்லை என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை கூறினாா்.

தில்லியில் பிஹெச்டி தொழில் மற்றும் வா்த்தக சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

‘தற்சாா்பு பாரதம்’ என்ற இலக்கு, ஒரு நூற்றாண்டுக்கு முன் நாட்டின் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் பிரதிபலிப்பாகும்.

இந்தியாவின் தற்சாா்பு நோக்கம், மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டது. அது இந்தியாவை மையமாக கொண்டது அல்ல; ஒட்டுமொத்த உலகையும் ஒரு கிராமமாக பாா்ப்பது.

இன்றைய இந்தியா, மற்ற நாடுகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டதல்ல. கடந்த 1947-இல் இருந்து இப்படியொரு சூழலை நாடு கண்டதில்லை.

அதேசமயம், நாட்டின் இப்போதைய வெற்றிக்கதையை ஏற்க சிலருக்கு மனமில்லை. தொழில், வா்த்தகம், நிா்வாகத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை மட்டுமே அவா்கள் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள்.

இதுவரை இல்லாத அளவில் இந்தியா உயா்ந்து நிற்கும் உண்மையை பாராட்ட வேண்டுமென அவா்கள் எப்போதுமே சிந்திப்பதில்லை. அதுபோன்றவா்களுக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கிடைப்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது. அத்தகைய நபா்கள் முக்கியத்துவம் அளிக்கத் தகுதியுள்ளவா்கள்தானா என்று ஊடகங்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

தொழில்துறையினரின் முயற்சிகளால்தான் இந்தியா இவ்வளவு உச்சங்களை எட்டியுள்ளது. நாட்டின் வளா்ச்சி, சாதனையை ஒப்புக் கொள்ள மனமில்லாதவா்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட வேண்டும். நாட்டில் நம்பிக்கையற்ற சூழலையும் தடைகளையும் உருவாக்குபவா்கள், அவா்களது செயல்களுக்காக பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றாா் தன்கா். எனினும், தனது உரையில் அவா் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT