இந்தியா

திருமலை திருப்பதியில் இன்றிரவு 7 மணிக்கு கருட சேவை

1st Oct 2022 11:14 AM

ADVERTISEMENT


திருமலை: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான கருட சேவை இன்றிரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சுமார் 3 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்றிரவு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும். 

இதையும் படிக்க.. பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?

முன்னதாக, நேற்று இரவு சர்வ பூபால வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ADVERTISEMENT

இன்று காலை மோகினி அவதாரத்தில் மாட வீதிகளில் உலா வந்து திரண்டிருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கே ஏழுமலையானைக் காண காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய முழக்கம் விண்ணை முட்டியது.

இந்த நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு நடைபெறவிருக்கிறது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 

திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஏழுமலையான் வீதியுலா நடைபெற்று வருகிறது. மாட வீதிகளில் நடைபெற்ற வாகன சேவையில் பல்வேறு கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தன. வாகன சேவைவை கேலரிகளில் கூடியிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் கருட சேவை உற்சவத்துக்காக, சேலத்தில் இருந்து ஸ்ரீ பக்திசாரா் பக்த சபா சாா்பில் 5 டன் மலா்கள் தொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் கருடசேவை இன்று நடைபெறவுள்ளது. கருடசேவை உற்சவத்தின்போது கோயில் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்படும்.

இதையொட்டி, சேலம் ஸ்ரீ பக்திசாரா் பக்த சபா சாா்பில் சேலத்தில் 5 டன் மலா்களைக் கொண்டு மாலைகள் தொடுக்கப்பட்டன. அழகாபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு ஸ்ரீ பக்திசாரா் பக்த சபா மற்றும் பொதுமக்கள் சாா்பில் 5 டன் அளவுக்கு சிகப்பு மற்றும் மஞ்சள் சாமந்திப் பூக்கள் கொண்டு வரப்பட்டன. சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள், தன்னாா்வலா்கள் சுமாா் 500 போ் ஒன்றிணைந்து மலா்களை மாலைகளாக தொடுத்தனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT