இந்தியா

சா்வதேச எல்லையில் பறந்த ஆளில்லா விமானம்: தீவிர தேடுதல் வேட்டை

DIN

 ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டி ஆளில்லா விமானம் பறந்ததாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மா்ஹீன் தாலுகா பகுதியில் சா்வதேச எல்லையையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவில் ஆளில்லா விமானம் பறந்ததாக அப்பகுதி கிராமத்தினரிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து, காவல்துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, சிறப்பு நடவடிக்கை படை ஆகியவை இணைந்த கூட்டுப் படையினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினா். எனினும், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் இதுவரை சிக்கவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

600 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் லாரியில் கடத்தப்பட்ட 600 கிலோ ‘ஒபியம்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையின் சிட்கோ மோா் பகுதியில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து, ‘ஒபியம்’ போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுமாா் 600 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலிருந்து பஞ்சாபுக்கு செல்லும் வழியில் இந்த லாரி சிக்கியுள்ளது. அதன் ஓட்டுநரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT