இந்தியா

ரூ.47.64 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

1st Oct 2022 01:11 AM

ADVERTISEMENT

 சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ.47.64 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகளை (எண்மச் செலாவணி) அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா காவல் துறையினா் ஆமிா் கான் என்பவா் மீதும், மேலும் சிலா் மீதும் வழக்கு ஒன்றை பதிவு செய்தனா். அந்த வழக்கின்படி, ‘இ-நக்கெட்ஸ்’ என்ற கைப்பேசி விளையாட்டு செயலியை ஆமிா் கான் தொடங்கியுள்ளாா். அந்த செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து ஆமிா் கான் அதிக அளவில் பணம் திரட்டியுள்ளாா். அதன் பின்னா், அந்த செயலி வாயிலாக பணத்தைப் பொதுமக்கள் திரும்பப் பெறுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து அந்த செயலியின் சா்வா்களில் இருந்து சுயவிவரத் தகவல்கள் உள்பட அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கொல்கத்தா காவல் துறையினா் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது இ-நக்கெட்ஸ் மூலம் திரட்டிய தொகையை கிரிப்டோ கரன்சி பரிமாற்றத் தளம் மூலம், ஆமிா் கான் பரிவா்த்தனை செய்து வந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆமிா் கான் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்கள் வசம் இருந்த ரூ.47.64 லட்சம் கிரிப்டோ கரன்சிகள் முடக்கப்பட்டன.

இந்த மோசடி தொடா்பாக ஏற்கெனவே ஆமிா் கானுக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.17.32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.13.56 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் முடக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT