இந்தியா

இந்தியாவுக்கு வந்த சிவிங்கிப் புலி: நல்ல செய்தி காத்திருக்கிறதா?

DIN

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 7 சிவிங்கிப் புலிகளில் ஒன்றான ஆஷா விரைவில் நல்ல செய்தி சொல்லப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 சிவிங்கிப் புலிகள் விரைவில் எட்டு ஆக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆஷா என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு சிவிங்கிப் புலி கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாகவும், அக்டோபர் மாத இறுதியில் இது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்ரிக்க நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட் 7 சிவிங்கிப் புலிகளும் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

7 சிவிங்கிப் புலிகளில் 4 பெண் சிவிங்கிப் புலிகள். அதில் ஒன்றுதான் ஆஷா.  இது குறித்து வனவிலங்குகள் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ஆஷா கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் அதனை உறுதி செய்துகொள்ள அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

இது உறுதி செய்யப்பட்டால், இந்தியாவில் முதல் சிவிங்கிப் புலியை ஈனப்போவது ஆஷாவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT