இந்தியா

மானியத் தொகை பெற வந்த விவசாயியிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி கைது

1st Oct 2022 04:03 PM

ADVERTISEMENT

 சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயிக்கு மானியம் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட  மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. விவசாயி ஒருவர் மானியத் தொகை பெறுவதற்காக தோட்டக்கலைத் துறையின் மூத்த அதிகாரியான பரம்ஜீத் சிங் குருதத்தினை சந்தித்துள்ளார். அப்போது அந்த விவசாயிடம் மானியத்தொகையினை விடுவிப்பதற்கு அவர் பெறும் மானியத் தொகையில் 50 சதவிகித பணத்தை லஞ்சமாக அந்த அதிகாரி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். 

இதையும் படிக்க: ஆ, இவ்வளவா?: பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் அறிவிப்பு

விவசாயியின் இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பரம்ஜீத் சிங்கினை கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: “ மானியத் தொகை ரூ.2,66,000 விவசாயியின் வங்கிக் கணக்கில் அரசினால் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை விடுவிப்பதற்காக மூத்த அதிகாரி பரம்ஜீத் சிங் 50 சதவிகித மானியத் தொகையை லஞ்சமாக கேட்டுள்ளார். அவர் லஞ்சம் கேட்கும் காட்சி விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.” என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT