இந்தியா

அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNL-ல் 5ஜி தொடக்கம்: மத்திய அமைச்சர்

1st Oct 2022 04:16 PM

ADVERTISEMENT

அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNL-ல் 5ஜி தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 5G சேவையை தொடக்கி வைத்தார். இது 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவுக்கான வரலாற்று நாள் என்றும், நாட்டின் தொலைத்தொடர்பு துறையில்  5ஜி தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது:

அடுத்த 6 மாதங்களில், 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 80-90 சதவீத மக்களுக்கு 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

BSNL  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவைகளை வழங்கும் என்று வைஷ்ணவ் கூறினார். இந்த சேவையானது அதிவேகமாகவும், குறைந்த விலையில் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: மானியத் தொகை பெற வந்த விவசாயியிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி கைது

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமா் மோடி தொடக்கிவைத்தார். 5ஜி சேவையின் செயல்பாடு பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT