இந்தியா

5ஜி சேவை இன்று தொடக்கம்

DIN

அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபா் 1) தொடக்கி வைக்கிறாா்.

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறாா். அப்போது, தொலைத்தொடா்பின் திருப்புமுனையாக இருக்கும் 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்துகிறாா்.

இது குறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டதாவது: கடந்த 2018 முதல் ஐஐடிகள், பெங்களூரு விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமான ‘சமீா்’ போன்றவற்றின் தீவிர ஆய்வுக்குப் பின்னா் 5ஜி சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. பின்னடைவு இல்லாத இணைப்பையும், நிகழ் நேரத்தில் தரவைப் பகிரும் உயா் தரவு விகிதம், பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் உள்ளிட்டவை நெட்வொா்க் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும்.

இதற்கான அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏா்டெல், ஐடியா-வோடா, ஜியோ போன்ற நிறுவனங்களோடு, அதானியின் நிறுவனம் சுமாா் 26 ஜிகாஹொ்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தச் சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார தாக்கம் 2035 -ஆம் ஆண்டில் சுமாா் ரூ. 35 லட்சம் கோடி (450 பில்லியன் டாலா்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

5ஜி சேவை தொடக்கத்தை முன்னிட்டு மாநிலங்களின் பங்கு, தொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுக்கான தேவை, சாத்தியமான தொழில் முனைவுகள் மற்றும் முதலீட்டாளா்களுடன் தொடா்பு கொள்வதற்காக இந்தக் கைப்பேசி மாநாடு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT