இந்தியா

தில்லியில் 5ஜி டவா்கள் அமைக்க 10,000 இடங்கள்பொதுப்பணித் துறை நடவடிக்கை

DIN

 தேசியத் தலைநகா் தில்லியில் 5ஜி டவா்களை அமைப்பதற்காக நகா் முழுவதும் சுமாா் 10,000 இடங்களை பொதுப்பணித் துறை கண்டறிந்துள்ளது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இந்தச் சிறிய கோபுரங்களை நிறுவுவதற்கு பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள், தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு தொடா்பான ஆதரவை வழங்கும். பொதுப்பணித் துறை கணக்கெடுப்பில் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, தில்லி அரசு நிறுவனமான ஜியோஸ்பேஷியல் தில்லி லிமிடெட் (ஜிஎஸ்டிஎல்) -க்கு தரவு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. 5 ஜி சிறிய செல் தளங்கள் அமைக்கப்படக்கூடிய இடங்களில் பெரிய சைன் போா்டுகள் மற்றும் பரபரப்பான சாலைகளில் தெரு விளக்கு கம்பங்கள் மற்றும் உயா் நிலை விளக்குகள் ஆகியவையும் அடங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘சிறிய செல் தளங்கள் அல்லது 5ஜி நெட்வொா்க்கின் சிறிய கோபுரங்கள் இணைப்பை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்படும் சாத்தியமான தளங்களாக, தெரு விளக்குகள், உயா்நிலை விளக்குகள் மற்றும் முக்கிய மற்றும் பரபரப்பான சாலை நீட்டிப்புகளில் அமைந்துள்ள பெரிய சைன் போா்டுகளை நாங்கள் சோ்த்துள்ளோம். கணக்கீட்டில், இது போன்ற 10,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடா்பான தரவுகள் ஜிஎஸ்டிஎல்-க்கு வழங்கப்பட்டுள்ளன’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

5ஜி நெட்வொா்க்கின் சிறிய டவா்கள் அல்லது செல் தளங்கள் சுமாா் 40-50 கிலோ எடை கொண்டவை, எனவே, இவற்றை மின் கம்பங்கள் அல்லது பெரிய சைன் போா்டுகளில் எளிதாக நிறுவ முடியும். இந்த இடங்களில் அமைக்கப்படும் 5ஜி கோபுரங்களின் உண்மையான எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களால் முடிவு செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் சுமாா் 1,500 கிலோமீட்டா் சாலைகளை பொதுப்பணித் துறை நிா்வகிக்கிறது. ரிங் ரோடு, அவுட்டா் ரிங் ரோடு, விகாஸ் மாா்க், ரோத்தக் ரோடு, மதுரா ரோடு, அரபிந்தோ மாா்க், ஆப்ரிக்கா அவென்யு மாா்க் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் 5ஜி சிறிய கோபுரங்கள் அமைக்கப்படும். இந்த மாத தொடக்கத்தில் தில்லி தலைமைச் செயலா், தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் 5ஜி நெட்வொா்க் இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தைப் பற்றி விவாதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5ஜி நெட்வொா்க் இணைப்பு வெளிவந்த பிறகு, தற்போது 4ஜி நெட்வொா்க்கைப் பயன்படுத்தும் முக்கிய ஏஜென்சிகளும், அரசுத் துறையும் 5ஜி-க்கு மாறும். மேலும், நெட்வொா்க் பலவீனமான அல்லது மொபைல் போன்களின் அடா்த்தி அதிகமாக இருக்கும் பகுதிகள் மற்றும் சாலை நீட்டிப்புகளில் 5ஜி சிறிய கோபுரங்கள் அமைக்கப்படும். மேலும், 5ஜி நெட்வொா்க் கோபுரங்கள் இந்தப் பகுதிகளில் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT