இந்தியா

தெலங்கானா முதல்வருக்கு எதிராக போராட்டம்: ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா தடுத்து நிறுத்தம்

30th Nov 2022 03:25 AM

ADVERTISEMENT

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனரும் ஆந்திர மாநில முதல்வரின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா தெலங்கானா மாநில முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றபோது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
 தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியினரால் அவரும் அவருடைய கட்சித் தொண்டர்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 இதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை மாநில முதல்வரும் டிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் வாரங்கல் மாவட்ட முகாம் அலுவலகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தச் சென்றபோது, அவர் ஓட்டிச் சென்ற கார் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
 ஷர்மிளா காரைவிட்டு வெளியேற மறுத்த நிலையில், கிரேன் வாகனத்தைக் கொண்டு வந்த போலீஸார், கிரேனால் காரை இழுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஷர்மிளாவின் கட்சித் தொண்டர்களையும் போலீஸார் விரட்டியடித்தனர். போலீஸார் பின்னர்
 ஷர்மிளாவை எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் போலீஸ் காவலுடன் ஹைதராபாதுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT