இந்தியா

விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

30th Nov 2022 05:00 AM

ADVERTISEMENT

சபரிமலை சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் பயணம் செய்ய புதன்கிழமை (நவ.30) முதல் முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: விசாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுகிழமை காலை 7.20 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.08567) டிச.4, 11, 18, 25 மற்றும் 2023 ஜன.1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

மறுமாா்க்கமாக செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.08568) கொல்லதிலிருந்து டிச.5, 12, 19, 26 மற்றும் 2023 ஜன.2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு புதன்கிழமை (நவ.30) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Special Train
ADVERTISEMENT
ADVERTISEMENT