இந்தியா

உ..பி.யில் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: முதல்வர்

30th Nov 2022 04:44 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பருவமழை காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 38 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்படும். ஆனால், இது தற்போது நான்கு மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

2017-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றபோது பாரபங்கியில் உள்ள எல்ஜின் பாலம் தொடர்பாக ரூ.100 கோடி செலவின மசோதாவைப் பெற்றதாகவும், அதன்பின்னர், பஹ்ரைச், கோண்டா மற்றும் பாரபங்கி மாவட்டங்களில் வெள்ளப் பிரச்னையை அரசு கட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறினார். 

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை குறித்த இரண்டு நாள் மாநாட்டில் ஆதித்யநாத் இதை தெரிவித்தார். 

படிக்க: முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்: நடந்தது என்ன?

பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான விழிப்புணர்வு அவசியம். பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே பேரிடர்களால் ஏற்படும் சேதங்களின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

குறிப்பாக மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் மின்னல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த முன்கூட்டியே எச்சரிக்கை முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் ஆதித்யநாத் கூறினார். 
 

Tags : CM Adityanath
ADVERTISEMENT
ADVERTISEMENT