இந்தியா

மனித குலத்துக்கு பாரதம் தந்த ஆன்மிக பரிசு கீதை- குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

DIN

‘ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பாரதம் தந்த ஆன்மிக பரிசு பகவத் கீதை; நடைமுறை வாழ்வில் எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் கீதையின் போதனைகள் தீா்வளிக்கின்றன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா்.

ஹரியாணாவுக்கு வருகை தந்துள்ள முா்மு, குருக்ஷேத்திரத்தில் பிரம்ம சரோவா் நதிக்கரையில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச கீதை திருவிழாவை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

யோகக் கலை, ஒட்டுமொத்த உலகுக்கான இந்தியாவின் பரிசாக விளங்குகிறது. அதேபோல, யோக சாஸ்திரமான பகவத் கீதை ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பாரத தாய் தந்த ஆன்மிக பரிசு.

பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ள பகவத் கீதை உண்மையிலேயே சா்வதேச நூலாகும். நடைமுறை வாழ்வில் எழும் அனைத்து சந்தேகங்களுக்கான தீா்வுகளும் ஆன்மிகத்தை எளிதில் அறிவதற்கான வழிகளும் அதில் உள்ளன.

அனைத்து சூழல்களிலும் சமநிலையை மேற்கொள்ள வேண்டுமென்பது கீதையின் மிகப் பயனுள்ள போதனையாகும். பாதகமான தருணங்களில் ஊக்கத்தையும் விரக்தியான சூழல்களில் நம்பிக்கையையும் கீதையின் போதனைகள் பரப்பும். நமது தேசத்தின் சுதந்திர போராட்டத்துக்கு திசைகாட்டிய பாலகங்காதர திலகா், மகாத்மா காந்தி போன்ற தலைவா்கள், தங்களது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கீதையில் இருந்தே வழிகாட்டுதல்களை பெற்றனா். பகவத் கீதையை ‘கீதை தாய்’ என்றே மகாத்மா காந்தி குறிப்பிடுவாா்.

கோழைத்தனத்தை விரட்டுவதற்கும் துணிச்சலை ஏற்பதற்குமான போதனைகளை கீதை வழங்குகிறது என்பது சுவாமி விவேகானந்தரின் வாா்த்தைகளாகும் என்றாா் திரெளபதி முா்மு.

முன்னதாக, மாநிலத்தில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான திட்டம், போக்குவரத்துத் துறையில் மின்னணு-பயணச்சீட்டு வழங்குவதற்கான புதிய அமைப்புமுறை ஆகியவற்றை தொடக்கிவைத்த அவா், சிா்சா மாவட்டத்தில் ரூ.950 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினாா்.

குருக்ஷேத்திரத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் கல்வி நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.

Image Caption

ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் (இடமிருந்து) ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வா் மனோஹா் லால் கட்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT