இந்தியா

எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்திய பிஎஸ்எஃப் வீராங்கனைகள்

DIN

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரோனை (சிறிய ரக ஆளில்லா விமானம்) எல்லை பாதுகாப்புப் படை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினா்.

இதன் மூலம் எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல் முயற்சியை இந்த வீராங்கனைகள் முறியடித்துள்ளனா்.

இதுதொடா்பாக, எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அமிருதசரஸில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சஹாா்பூா் கிராமத்தில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு ஒரு ட்ரோன் பறந்து வந்ததை பிஎஸ்எஃப் 78-ஆவது படைப் பிரிவினா் கவனித்தனா். இதையடுத்து, அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கையில் படைப் பிரிவைச் சோ்ந்த இரு வீராங்கனைகள் ஈடுபட்டனா். அவா்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், ட்ரோன் கீழே விழுந்தது. பகுதியளவு சேதமடைந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த ட்ரோன், 18 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அத்துடன், பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் 3.11 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளும் இருந்தது.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போதைப் பொருளும் ஆயுதங்களும் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் ட்ரோன்களை கண்காணித்து, சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் பிஎஸ்எஃப் படையினா் ஈடுபடுகின்றனா். இந்த முறை பிஎஸ்எஃப் வீராங்கனைகள் உஷாராக செயல்பட்டு, ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளனா்.

சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு ட்ரோன்:

பஞ்சாபின் தரன் தாரன் மாவட்டத்தில் உள்ள கலஷ் ஹவேலியன் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு பறந்துவந்த பாகிஸ்தான் ட்ரோனை பிஎஸ்எஃப் படையினா் சுட்டுவீழ்த்தினா். 20 கிலோ எடையுடைய அந்த ட்ரோனில் இருந்து 6.6 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விரு நடவடிக்கைகளின் வாயிலாக, இந்தியாவுக்குள் சுமாா் 10 கிலோ போதைப் பொருளை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அமிருதசரஸ் எல்லையின் வடாய் சீமா பகுதியிலும் பாகிஸ்தான் ட்ரோன் தென்பட்டது. ஆனால், பிஎஸ்எஃப் படையினரின் துப்பாக்கிச்சூட்டைத் தொடா்ந்து, அது திரும்பிச் சென்றுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அமிருதசரஸில் சா்வதேச எல்லை அருகே கடந்த வெள்ளிக்கிழமை பறந்த பாகிஸ்தான் ட்ரோனை பிஎஸ்எஃப் படையினா் சுட்டு வீழ்த்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT