இந்தியா

கடந்த 15 ஆண்டுகளாக பாஜக எதுவும் செய்யவில்லை: கேஜரிவால்

30th Nov 2022 06:04 PM

ADVERTISEMENT

 

தில்லி மாநகராட்சித் தேர்தலில் பாஜக தனது ஆட்சிக் காலத்தில் எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்று முதல்வர் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

புது தில்லியில் உள்ள மல்கா கஞ்ச் என்ற இடத்தில் கேஜரிவாலின் சாலை பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

மாநகராட்சித் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவும் செய்யாததால், உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பிராசாரம் செய்ய பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கிடைத்துள்ளனர் 

நீங்கள் என்ன வேலை செய்தீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டால், அவர்களுக்கு ஒரே சாக்கு என்னவென்றால், கேஜரிவால் நிதி கொடுக்கவில்லை என்பது தான். 

படிக்க: முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்: நடந்தது என்ன?

தில்லி அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கியதாகவும் அவர் கூறினார். பாஜகவினர் உங்களிடம் ஓட்டு கேட்டால், 1 லட்சம் கோடியை என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள். 

ஆனால், ஆம் ஆத்மி அரசுப் பள்ளிகளை உருவாக்கியுள்ளது. இலவச மின்சாரத்தை உறுதி செய்துள்ளது. சிறந்த மொஹல்லா மருத்துவ விடுதிகளை வழங்கியுள்ளது. 

மாநகராட்சி தேர்தலில் தனக்கு ஒரு வாய்ப்பளித்தால், நகரின் குப்பைகளைச் சுத்தம் செய்வோம் என்று அவர் கூறினார். 

தில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ல் நடத்தப்பட்டு, டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT