இந்தியா

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க கேரள அமைச்சரவை ஒப்புதல்

30th Nov 2022 08:20 PM

ADVERTISEMENT

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்ட வரைவு மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கேரள மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மாநில அரசின் நடவடிக்கை கவனம் பெற்றது. 

இதையும் படிக்க | பொய் செய்திகளுக்கு எதிரான பணிகளைத் தீவிரப்படுத்தும் கூகுள், யூடியூப்

கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் வகையில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டத்தை ஆளும் இடதுசாரி அரசு கொண்டுவந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் கேரள அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான வரைவு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT