இந்தியா

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்ட விதிகளை அமல்படுத்துவதே முக்கியம்: உச்ச நீதிமன்றம்

30th Nov 2022 06:36 PM

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்ட விதிகளை அமல்படுத்துவதே முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முறையாக பயிற்சிபெற்ற காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்தபடுகிறது என்று ஜல்லிக்கட்டு விதிமுறைகளுக்கு பீட்டா அமைப்பின் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதைத் தடுக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்ட விதிகளை அமல்படுத்துவதே முக்கியம்; நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை(நவம்பர் 24) தொடங்கியது.

மத கலாச்சார விழாவாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பாா்க்கப்படுகிறது என்றும் இந்தப் போட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாதிப்பு ஏற்படாமல் பாா்த்து கொள்ளப்படுகிறது என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை தடையின்றி நடத்த தமிழக 2017-இல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் அரசியல்சாசன சட்டவிவகாரம் இடம்பெற்றுள்ளதால் இந்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு 2018-இல் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு பரிந்துரைத்தது.

இதையும் படிக்க: டிமாண்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம்

இந்நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதைத் தடுக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்ற அரசியல்சாதன அமர்வு தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT