இந்தியா

8, 9, 10ம் வகுப்பு மாணவர்கள் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள்!

30th Nov 2022 08:12 PM

ADVERTISEMENT


பெங்களூருவில் 8, 9, 10ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. 

படிக்கசிறை அலுவலர் பணிக்கு டிச.26-ல் கணினி வழித்தேர்வு: டிஎன்பிஎஸ்சி

இதனைத் தொடர்ந்து வகுப்பறைகளில் பள்ளி நிர்வாகத்தினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளி மாணவர்களின் பைகளில் சிகரெட், ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்ஸ், வைட்னர்ஸ், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துனர். இனி மாணவர்களின் செயல்பாடுகளை நுணுக்கமாக கவனிக்குமாறு பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT