இந்தியா

ரூ. 614.53 கோடியை நன்கொடையாக பெற்றது பாஜக: காங்கிரஸுக்கு ரூ. 95.46 கோடி- தோ்தல் ஆணையம் தகவல்

DIN

கடந்த 2021-22 நிதியாண்டில் மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக உள்ள பாஜக ரூ. 614.53 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெற்ற ரூ. 95.46 கோடியை விட 6 மடங்குகள் அதிகமாகும்.

நாட்டின் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும், கடந்த நிதியாண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விவரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தன. அது குறித்தான தகவல்களை செவ்வாய்க்கிழமை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, 2021-22-இல் பாஜக ரூ. 614.53 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் ரூ. 95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

மேற்குவங்கத்தில் ஆட்சிப் புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 லட்சமாகும். கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான மாா்க்சிஸ்ட் ரூ. 10.05 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கும் கடந்த 2021-இல் மாா்ச்-மே மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சிப் புரிந்து வரும் ஆம் ஆத்மி கட்சி, கடந்த நிதியாண்டில் ரூ. 44.54 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. தில்லி, பஞ்சாப், கோவா ஆகிய 3 மாநிலங்களில் இக்கட்சி மாநில கட்சிக்கான அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிநபா்கள், நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தோ்தல் அறக்கட்டளைகளும் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. புரூடண்ட் தோ்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு அதிக அளவில் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 20,000-க்கும் அதிகமான தொகையை நன்கொடையாகப் பெறும் கட்சிகள், அது குறித்தான தகவலைத் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT