இந்தியா

மேற்கு வங்க பேரவையிலிருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

DIN

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாவித்ரி மித்ராவைக் கண்டித்து மேற்கு வங்க சட்டப்பேரவையிலிருந்து செவ்வாய்கிழமை பாஜக வெளிநடப்பு செய்தது.

கேள்வி நேரத்தைத் தொடா்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் அக்னிமித்ரா மற்றும் மாலதி ராவா இவ்விவகாரம் தொடா்பாக ஒத்திவைப்பு தீா்மானம் ஒன்றை முன் வைத்தனா். இது மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை இல்லையென்று கூறி அத்தீா்மானத்தை அவைத்தலைவா் பிமன் பானா்ஜி நிராகரித்தாா்.

மேலும் பேசிய அவா், ‘அரசியலமைப்பு தினத்தன்று பேசிய சில வாா்த்தைகளை இப்பேரவையிலிருந்து நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொது இடத்தில் பயன்படுத்திய வாா்த்தைகளை சட்டப்பேரவையில் கூற இயலாது. உறுப்பினா்கள் அனைவரும் பேரவையின் உள்ளேயும் வெளியேயும் பேசும்போது மாண்பைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாவித்ரி மித்ரா பேசுகையில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை மகாபாரதத்தில் வரும் துரியோதனன் - துச்சாதனன் என்று குறிப்பிட்டு பேசியிருந்தாா். அந்த விடியோவைப் பதிவிட்டு பாஜகவினா் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனா்.

இதற்கு விளக்கமளித்து சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ. சாவித்ரி மித்ரா தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றாா். அவா் பேசிக்கொண்டிருக்கும்போதே பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT