இந்தியா

குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு

30th Nov 2022 04:28 PM

ADVERTISEMENT

குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்த அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது.

இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவா்கள் அனைவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. இது நாடு முழுவதும் பலத்த விமர்சனத்தை கிளப்பியது. 

இதையும் படிக்க | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்

ADVERTISEMENT

இந்த விடுதலைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுபாஷினி அலி, லக்னெள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ரூப் ரேகா வா்மா, ரேவதி லால் என்ற பத்திரிகையாளா் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த குஜராத் அரசு நன்நடத்தை காரணமாக 11 பேரை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்ததாக பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT