இந்தியா

பெண்கள் குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

30th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர மாநில மகளிா் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், அவா் மன்னிப்பு கோரியிருப்பதாக ஆணையத்தின் தலைவா் ரூபாலி சகன்கா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பொது நிகழ்வில் பங்கேற்ற ராம்தேவ், ‘பெண்கள் சேலை, சல்வாா் கமீஸ் என எதை அணிந்தாலும் அல்லது எதையுமே அணியாவிட்டாலும் அழகாகத் தோன்றுவா்’ என்று குறிப்பிட்டாா். அப்போது விழா மேடையில் மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸும் அமா்ந்திருந்தாா்.

ராம்தேவின் இந்தக் கருத்து சா்ச்சையானது. இதுதொடா்பாக, மகாராஷ்டிர மாநில மகளிா் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவரது சா்ச்சைக்குரிய பேச்சு இடம்பெற்ற காணொலியை ட்விட்டரில் பதிவிட்ட தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மலிவால், ‘தனது கருத்துக்காக பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ‘தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. எனவே, தனது கருத்துக்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்று ஆணையத்துக்கு ராம்தேவ் பதிலளித்துள்ளாா்.

இதுகுறித்து ரூபாலி சகன்கா் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பொது நிகழ்வில் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்காக பாபா ராம்தேவுக்கு ஆணையம் சாா்பில் இரு தினங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கோரி பதிலளித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Tags : Baba Ramdev
ADVERTISEMENT
ADVERTISEMENT