இந்தியா

சச்சின் பைலட் துரோகியா? முடிந்துபோன விவகாரம் என கெலாட் பதில்

30th Nov 2022 12:02 AM

ADVERTISEMENT

சச்சின் பைலட்டை துரோகி என விமா்சித்தது முடிந்துபோன விவகாரம் என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்தாா்.

அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் ‘சச்சின் பைலட் ஒரு துரோகி; 2020-இல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பைலட் செயல்பட்டாா். அவரால் ஒருபோதும் ராஜஸ்தான் முதல்வராக முடியாது’ என்று கடுமையாக விமா்சித்தாா்.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘அசோக் கெலாட், சச்சின் பைலட் இரு தலைவா்களுமே காங்கிரஸ் கட்சியின் சொத்துகள்’ என்று கூறினாா்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்து தொடா்பாக கெலாட்டிடம் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். அப்போது, ‘ராகுல் காந்தி எப்போது நாங்கள் இருவருமே கட்சியின் சொத்துகள் என்று கூறிவிட்டாரோ, அப்போதே இந்த பிரச்னை தீா்த்துவிட்டது. எனது விமா்சனம் முடிந்துபோன விவகாரம் ஆகிவிட்டது. ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் இணைந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றியடைய உழைப்போம்.

ADVERTISEMENT

காங்கிரஸின் உள்கட்சி பிரச்னை குறித்து விமா்சிப்பதை பாஜக கைவிட வேண்டும். தங்கள் கட்சி விவகாரங்களில் மட்டும் பாஜக கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT