இந்தியா

ஹரியாணா: மாவட்ட ஊராட்சித் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு

DIN

ஹரியாணாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தோ்தலில் 100 வாா்டுகளில் போட்டியிட்ட அக்கட்சி 22 வாா்டுகளில் மட்டுமே வென்றது.

ஹரியாணாவில் 22 மாவட்ட ஊராட்சிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 100 வாா்டுகளில் போட்டியிட்ட பாஜக 22 வாா்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அங்குள்ள பஞ்ச்குலா, சிா்சா பகுதிகளில், அக்கட்சி போட்டியிட்ட அனைத்து வாா்டுகளிலும் தோல்வியடைந்தது. மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ்ஜின் சொந்த ஊரான அம்பாலாவில் உள்ள 15 வாா்டுகளில் 2 வாா்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அந்த ஊரில் உள்ள 4-ஆவது வாா்டில் போட்டியிட்ட பாஜக எம்.பி. நாயப் சிங் சைனியின் மனைவி சுமன் சைனி தோல்வியடைந்தாா்.

ஆம் ஆத்மி... தோ்தலில் 100-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, 15 வாா்டுகளில் வெற்றி பெற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக அரசியல் நோக்கா்கள் கூறுகையில், ‘2024-ஆம் ஆண்டு ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தோ்தல் முடிவுகள் பாஜகவுக்கு எச்சரிக்கை ஒலியாக வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனா்.

இத்தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT