இந்தியா

ம.பி.யில் சாலை விபத்து: மூன்று பத்திரிகையாளர்கள் பலி!

29th Nov 2022 11:41 AM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின், ரைசென் மாவட்டத்தில் வேகமாக வந்த டிரக் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் உள்ளூர் பத்திரிகையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் லம்பகெடா அருகே நிகழ்ந்ததாக சலாமத்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் தேவேந்திர பால் தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜேஷ் சர்மா, சுனில் சர்மா மற்றும் நரேந்திர தீட்சித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் வாகனத்துடன் தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் பெர்கெடி அருகே வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

படிக்க: கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: மு.க. ஸ்டாலின்

உயிரிழந்தவர்கள் பத்திரிகையின் வாராந்திர வெளியீட்டிற்கான பிரிண்டிங் ஆர்டரை கொடுத்துவிட்டு போபாலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மூன்று மூன்று பத்திரிகையாளர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT