இந்தியா

சிவசேனை விவகாரம்: டிச. 12-ல் தேர்தல் ஆணையம் விசாரணை

DIN

சிவசேனை கட்சியின் சின்னத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோரி வரும் நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை தொடங்குகிறது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரேவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் சிவசேனை கட்சியின் பெயருக்கும், சின்னத்திற்கும் உரிமை கோரிய நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், சின்னம் தொடர்பான சர்ச்சை வழக்கை டிசம்பர் 12ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை டிசம்பர் 9 மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் சிவசேனையில் இருந்து விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை மாற்றினா். அவா்கள் சிவசேனையின் கட்சிப் பெயரையும், சின்னத்தையும் கோரியதால், தோ்தல் ஆணையம் கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி சின்னத்தை முடக்கி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT