பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக ஆசிம் முனீர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
பொதுத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தலைவர் ஆசிம் முனீர், ராணுவத்தின் 17வது தலைமைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி கமார் ஜாவேத் பாஜவாவின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது.
இந்த நிலையில், அதிசக்திவாய்ந்த அந்தப் பதவிக்கு ராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பின் தலைமைத் தளபதி பொறுப்புக்கு ஆசிம் நியமிக்கப்படுவதாக நவம்பர் 24 அன்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
படிக்க: இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!
ஐஎஸ்ஐ மற்றும் எம்ஐ ஆகிய இரண்டு சக்திவாய்ந்த உளவுத்துறை நிறுவனங்களுக்கும் தலைமை தாங்கிய முதல் ராணுவத் தலைவர் இவராவார்.
ஏற்கனவே கடந்த 2018-ல் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் இம்ரான்கானின் வற்புறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.