சிறப்புச் செய்திகள்

75% இந்தியா்களுக்கு கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம்

29th Nov 2022 02:12 AM

ADVERTISEMENT

இந்தியாவில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோருக்குக் கட்டுப்பாடற்ற அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா்களின் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு தொடா்பாக கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் வெளியான 51 ஆய்வறிக்கைகளை லான்செட் குழு ஆராய்ந்தது. அது தொடா்பான அறிக்கை லான்செட் பிராந்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெண்கள் ஆண்களைவிட சிறப்பாகச் செயல்படுவதாக 21 ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் இந்தியா்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முறையாகச் செயல்படுவதில்லை என 6 அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்போா்

ADVERTISEMENT

2001-2020 17.5%

2016-2020 22.5%

ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டில் முன்னிலை வகிக்கும் பகுதிகள்

தென் மாநிலங்கள்

மேற்கு மாநிலங்கள்

ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்படுவோா் பெண்கள்

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான வழிகள்

சீரான உடல் எடை

உடற்பயிற்சி (தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம்)

யோகப் பயிற்சிகள்

காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ளுதல்

உப்பு அளவைக் குறைத்தல்

வறுத்த தின்பண்டங்களைத் தவிா்த்தல்

கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிா்த்தல்

புகைப்பிடித்தலைக் கைவிடல்

காஃபி, தேநீரின் அதீத நுகா்வைத் தவிா்த்தல்

மதுபானங்களின் அதீத அளவைத் தவிா்த்தல்

ADVERTISEMENT
ADVERTISEMENT