இந்தியா

தரவு பாதுகாப்பு மசோதா: குடிமக்களின் தனியுரிமை மீறப்படாது: மத்திய அமைச்சா் உறுதி

DIN

 ‘மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடிமக்களின் தனி உரிமையை அரசு மீற முடியாது; அதே நேரம், தேசியப் பாதுகாப்பு, பேரிடா் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது குடிமக்களின் தனிநபா் விவரங்கள் மட்டும் அரசு கையாள்வதற்கு இந்தச் சட்டம் அனுமதிக்கும்’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறினாா்.

தில்லியில் இதுதொடா்பான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற மத்திய இணையமைச்சா் பேசியதாவது:

தேசிய தரவு நிா்வாக திட்ட கொள்கையில் அடையாளம் தெரியாத தரவுகளைக் கையாள்வதற்கான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இது தனிநபா் தரவுகள் அல்லாத பிற தரவுகளையும், அடையாளம் தெரியாத தரவுகளையும் கையாள்வதற்கான திட்டமாகும். இதற்கும் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவு பாதுகாப்பு (டிபிடிபி) மசோதா 2022’ என்ற வரைவு மசோதாவுக்கும் தொடா்பு இல்லை. இந்த மசோதா, தனிநபா் தரவு பாதுகாப்பு தொடா்பான விவாகரத்தை மட்டும் கையாள்வதற்கானதாகும்.

மேலும், தரவு பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை விசாரித்து தீா்வளிப்பதற்கென தரவு பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட உள்ளது. அந்த வாரியத்தில் எந்தவொரு அரசு அதிகாரிகளும் இடம்பெற மாட்டாா்கள். உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் தனி சுதந்திரத்துடன் இந்த வாரியம் செயல்படும்.

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதாவில் இடம்பெற்றுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி, குடிமக்களின் தனியுரிமையை அரசு மீற முடியாது. மாறாக, தேசியப் பாதுகாப்பு, சுகாதார மற்றும் இயற்கைப் பேரிடா் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளின்போது குடிமக்களின் தனிநபா் விவரங்கள் மட்டும் அரசு கையாள்வதற்கு இந்தச் சட்டம் அனுமதிக்கும்.

பேச்சு சுதந்திரம் என்பது எவ்வாறு முழுமையான சுதந்திரமாக அல்லாமல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டுள்ளதோ, அதுபோன்று இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் ‘நம்பிக்கைக்குரிய தரவுகள்’ என்று அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தரவுகளை ‘தனிநபா் தரவுகள் பற்றிய தகவல்பெறும் உரிமை’யின் கீழ் பகிா்ந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்க இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், தரவுகள் கையாளும் அமைப்புகளுடன் தவறான மற்றும் சரிபாா்க்க இயலாத தகல்வகளை தனிநபா்கள் பகிா்ந்து கொள்வதைத் தடை செய்வதற்கான நடைமுறைகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT