இந்தியா

தெலங்கானாவில் சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் தொண்டையில் சிக்கி பலி

28th Nov 2022 10:16 AM

ADVERTISEMENT

தெலங்கானாவில் சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கங்கன் சிங். இவருடைய மகன் சந்தீப் சிங்(8) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்றுமுன் தினம் சந்தீப் சிங் தனது தந்தை ஆசையாக வாங்கி வந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். அப்போது சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அச்சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிக்க- காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்

ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறுவனின் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லெட் வாங்கி வந்திருக்கிறார். சிறுவன் பள்ளிக்கு சாக்லெட் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதேபோல், சனிக்கிழமை காலை 10 மணியளவில் சாக்லெட் சாப்பிட்ட சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

உடனே சிறுவனை வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதனால் இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. 

Tags : Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT