இந்தியா

குஜராத் முதல்கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது

28th Nov 2022 09:08 AM

ADVERTISEMENT

குஜராத் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது. இத்தொகுதிகள் செளராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் பிராந்தியங்களில் அடங்கியவை.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், புதுவரவான ஆம் ஆத்மி ஆகியவற்றின் வேட்பாளா்கள், சிறிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 788 போ் களத்தில் உள்ளனா்.

இதையும் படிக்க- ஒரே குடையின் கீழ் கிராம ஊராட்சிகளின் வங்கிக் கணக்குகள்: தமிழக அரசு உத்தரவு

ADVERTISEMENT

அதேசமயம் முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 88 இடங்களில் ஆம் ஆத்மி களத்தில் உள்ளது. பாஜகவும் காங்கிரஸும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியின்றன. இந்த நிலையில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதன் காரணமாக அரசியல் தலைவர்கள் பலர் அத்தொகுதிகளில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபடுள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-இல் இருந்து தொடா்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பாஜக, ஏழாவது முறையாக வாகைசூடும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT