இந்தியா

கெலாட், பைலட் காங்கிரஸின் சொத்துக்கள்: சொன்னவர் இவர்தான்?

28th Nov 2022 04:32 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே விரிசல் அதிகரித்துள்ள நிலையில், இரு தலைவர்களும் கட்சியின் சொத்துக்கள் என்று ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார். 

திங்கள்கிழமை பாரத் ஜோடோ யாத்திரையின்போது இந்தூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 

குறிப்பிட்ட பிரச்னையில் எந்த கருத்தையும் கூறி சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் காங்கிரஸின் சொத்துக்கள் என்று மட்டும் என்னால் கூற முடியும் என்றார். 

ADVERTISEMENT

தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை திட்டமிட்டபடி டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தானுக்குச் செல்லவிருக்கிறது. 

2020-ல் கமல்நாத் ஆட்சி கவிழ்வதற்கு காரணமான..பாஜகவுக்கு மாறிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மீண்டும் கட்சியில் இடம் கொடுக்கக்கூடாது என்றார். 

இந்த விஷயத்தில் மத்தியப் பிரதேசத் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றாலும், காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பாஜகவிடம் பணம் வாங்கிய எம்எல்ஏக்களுக்கு மீண்டும் இடம் கொடுக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். 

படிக்க: தில்லியில் மேலும் ஒரு சம்பவம்: கணவரை 22 துண்டுகளாக்கிய மனைவி!

பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த தனது கருத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்ட கேள்விக்கு... 

தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் தான் முழு கவனம் செலுத்தியுள்ளதாகவும், வேறு எந்த அரசியல் பிரச்னையும் அல்ல. இந்த கேள்விக்குப் பிறகு நான் பதிலளிப்பேன். தற்போது எனது முழு கவனம் பாரத் ஜோடோ யாத்திரையை எப்படி முடிப்பது என்பதில் உள்ளது என்றார். 

பாரத் ஜோடோ யாத்திரையின்போது கட்சியைப் பற்றியோ, அரசியல் பிரச்னையை பற்றியோ தான் சிந்திக்கவில்லை என்றும், பாரத் ஜோடோ யாத்திரையினால் காங்கிரஸில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? எந்த அளவில் இருக்கிறது? இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸைப் பற்றி யோசிக்கவே இல்லை. தினமும் 25 கி.மீ நடந்துச்சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பேச்சைக் கேட்கிறேன். மேலும் தனது முழு கவனத்தையும் யாத்திரையில் மட்டுமே செலுத்தியுள்ளேன் என்று காந்தி மேலும் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT