ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியில் உள்ள பிரேம் மந்திர் அருகே காலை 8.30 மணியளவில் ராம்பான் மாவட்டத்தில் உள்ள கூல்-சங்கல்தான் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் ஜம்முவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது
இந்த விபத்து நடைபெற்றது.
கார் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
படிக்க: சென்னை பனிமூட்டம்: விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்; ரயில்கள் வேகம் குறைப்பு!
இந்த விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் (தொழுகை தலைவர்) முப்தி அப்துல் ஹமீத் (32) மற்றும் அவரது தந்தை முப்தி ஜமால் தின் (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அவரது தாயார் ஹஜ்ரா பேகம் (60), மருமகன் அடில் குல்சார் (16) ஆகியோர் மீட்கப்பட்டனர். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், இறந்த நான்கு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.