இந்தியா

தில்லி காலணி தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!

28th Nov 2022 04:46 PM

ADVERTISEMENT

 

தலைநகர் தில்லியில் கேசவ்புரம் தொழிற்பேட்டையில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், 

கேசவ்புரம் தொழிற்பேட்டையில் உள்ள லாரண்ஸ் சாலையில் உள்ள ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான அழைப்பு இன்று மதியம் கிடைத்தது. 

ADVERTISEMENT

படிக்க; கெலாட், பைலட் காங்கிரஸின் சொத்துக்கள்: சொன்னவர் இவர்தான்?

அழைப்பின் பேரில், சம்பவ இடத்துக்கு மொத்தம் 27 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்த தீ விபத்தில் இதுவரை எந்தவித உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. 

மேலும் தீ விபத்து நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT