இந்தியா

டிம்பிள் யாதவுக்கு அவ்வளவு எளிதாகக் கிட்டுமா வெற்றிக்கனி?

28th Nov 2022 04:54 PM

ADVERTISEMENT

மணிப்பூர்: முலாயம் சிங் யாதவ் இல்லாததால், மணிப்பூரி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் டிம்பிள் யாதவ் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறுகிறார்கள் உள்ளூர்வாசிகள்.

ஆனால், சிலரோ, மறைந்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் மீதான இரங்கல் காரணமாக அவரது அனுதாப ஓட்டுகள் அனைத்தும் டிம்பிள் யாதவுக்கு வெற்றி ஓட்டுகளாக மாறும் என்றும் மணிப்பூரில் வாழும் சிலர் கருதுகிறார்கள்.

கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை, மணிப்பூரி நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.

ஆனால்,இந்தத் தொகுதியை சமாஜ்வாதிக் கட்சியிடமிருந்து கைப்பற்ற பாஜக அனைத்து யுக்திகளையும் பயன்படுத்துகிறது. ஏற்கனவே, ஏராளமான பாஜக தலைவர்கள் இந்தத் தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டனர்.

ADVERTISEMENT

பாஜக வேட்பாளர ரகுராஜ் சிங் ஷாக்யா மக்களை சந்திப்பதும் வாக்கு சேகரிப்பதும் ஒரு சாதாரண நடைமுறையாகவே இருக்கிறதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்களாம். பாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்காவிட்டால், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

மறைந்த முலாயம் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு இந்தத் தொகுதியிலிருக்கும் அனைவரும் நன்கு அறிமுகம். ஒவ்வொரு குடும்பத்தையும் இருவருக்கும் தெரியும். அவர்கள் அடிக்கடி வராவிட்டாலும் அவர்களைத்தான் இவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது என்று களத்தை நேரில் பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்.

இதுவரை பார்த்திராக ஒரு தேர்தலை மணிப்பூரி பார்ப்பதாகவும், இதுவரை யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும், எந்த சந்தர்ப்பம் யாருக்கு சாதகமாகும் என்று கூறமுடியவில்லை என்றும் கள நிலவரங்கள் கூறுகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT